போலீஸ் செய்திகள்
கோயிலில் திருட்டு பூவந்தி : கிளாதரி அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய
கிளாதரி அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பித்தளை குத்து விளக்கு, மணிகள் -வழங்கியிருந்தனர். இவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை அருகே கோவானுார் முருகன் 55. இவரது குடும்பத்திற்கும் ஜெயக்குமார் குடும்பத்திற்கும் இடையே 8 மாதங்களுக்கு முன் பிரச்னை இருந்துள்ளது. கிராமத்தில் பேசி சமரசம் செய்து வைத்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமாரின் மகன்கள் அலெக்ஸ் 27, பிரவீன் 21, ஜெயராமன் மகன் பன்னீர் 22, பிச்சைமுத்து மகன் மனோஜ்குமார் 22 ஆகிய 4 பேர்களும் முருகன் வீட்டிற்கு சென்று, கதவை உடைத்து அங்கிருந்த முருகன், அவரது மனைவி மங்கையர்கரசியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். சிவகங்கை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம், புலிப்பட்டி வீரன் 45. இவர் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக இருந்தார். செப்., 12 அன்று இரவு 11:00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி, வி.சி.க.,வினர் சிங்கம்புணரி 4 ரோட்டில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மறியலை கைவிட்டு சென்றனர்.