தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி
சட்டமன்றத்தில் ”தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மீது கடந்த தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். ”துணிவிருந்தால் நீங்கள் தண்டியுங்கள்" எனச் சவால் விட்ட உதயநிதியின் பேச்சு, அனலைக் கிளப்பியிருக்கிறது.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர்.
100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எதிர்க்கட்சிகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டதால், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



