காற்று தூய்மையாக உள்ள நகரங்களின் பட்டியல்; லக்னோ முதலிடம்; சென்னை 35-வது இடம் - சமூக ஆர்வலர்கள் கவலை
சென்னை,மத்திய அரசு வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் காற்று தூய்மையாக உள்ள நகரங்களின் தேசிய தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக
மத்திய அரசு வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் காற்று தூய்மையாக உள்ள நகரங்களின் தேசிய தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டின் 48 முக்கிய நகரங்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பிரிவில், லக்னோ 198 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அதை தொடர்ந்து இந்தூர் (197) மற்றும் ஜபல்பூர் (195) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இடம்பெற்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மூன்று நகரங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. திருச்சி சிறப்பாக செயல்பட்டு, 183 புள்ளிகளுடன் தேசிய அளவில் 12-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தின் தலைநகரான சென்னை 35-வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை, 132.1 புள்ளிகளுடன் 39-வது இடத்தை பிடித்தது.










