ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நீரஜ் சோப்ரா அவுட்... வைபவ் சூர்யவன்ஷி மீது குவியும் பார்வை
ஜப்பான்,ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 தொடரில் இருந்து நீரஜ் சோப்ரா விலகி இருக்கும் நிலையில், தற்போது அனைவரது பார்வையும் வைபவ் சூர்யவன்ஷி மீது குவிந்துள்ளது. 45
ஜப்பானில் வருகிற 19-ந்தேதி தொடங்க உள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. கடந்த முறை வென்ற 106 பதக்கங்கள் என்ற சாதனையை முறியடித்து, இம்முறை 106-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்லும் இலக்குடன் இந்திய வீரர்-வீராங்கனைகள் களம் காண உள்ளனர்.
இம்முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் 43 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் சார்பில் 503 வீரர்-வீராங்கனைகள் உள்பட மொத்தம் 768 பேர் கொண்ட குழு ஜப்பான் செல்கிறது. இதில் 269 ஆண் வீரர்களும், 234 பெண் வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.


