குறிபார்த்து சுடுவதில் பள்ளி மாணவர்கள் கில்லி
கோவை: பள்ளி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பை மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டி பி.ஆர்.எஸ். மைதானத்தில் நேற்று துவங்கி, வரும் 14 வரை நடக்கிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 250 பேர் பங்கேற்றுள்ளனர்.
10 மீ., ஏர் ரைபிள், பீப் சைட், ஓபன் சைட், பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. போலீஸ் கமிஷனர் கண்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். எஸ்.டி.ஏ.டி., மண்டல முதுநிலை மேலாளர் அருணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாவட்ட அளவிலான கோ கோ போட்டிகள் தியாகி என்.ஜி.ஆர்., பள்ளியில் நேற்றும், இன்றும் நடக்கிறது. மாணவர் பிரிவில், 58 அணிகளும், மாணவியர் பிரிவில் 40 அணிகளும் பங்கேற்றுள்ளன.



