தீயணைப்பு அதிகாரிக்கு 3-வது முறையாக முன் ஜாமின் மறுப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச பணத்தை மறைத்து வைத்த வழக்கில் திருப்பூர் தீயணைப்பு அதிகாரி வீரராஜின் முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலி தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச பணம் மறைத்து வைக்கப்பட்ட வழக்கில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முதல் குற்றவாளியான திருப்பூர் தீயணைப்பு அதிகாரி வீரராஜ் மட்டும் கைது செய்யப்படவில்லை.இவர் 2025 டிசம்பரில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமின் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி ஸ்ரீமதி தள்ளுபடி செய்தார்.
2026 பிப்ரவரியில் 2-வது முறையாக தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவும் நீதிபதி ஸ்ரீமதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.



