பொறுப்பில்லாத பொறுப்பு அமைச்சர் சிறு, குறு தொழில் சங்கங்கள் குமுறல்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கீர்த்தனா மூன்று முறை வருகை தந்தும், சிறு, குறு தொழில் சங்கத்தினரை அழைத்து பேசவில்லை என, தொழில்முனைவோர் அதிருப்தியடைந்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் நகரம், கர்நாடகாவின் பெங்களூருக்கு இணையாக வளர்ந்து வருகிறது.
ஓசூரிலுள்ள சிட்காப் தொழிற்பேட்டைகள், சிட்கோக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிட்டத்தட்ட 3,000த்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள், 150க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் உள்ளன. அங்கு, லட்சக்கணக்கானோர் பணி செய்கின்றனர்.

