டிஜிட்டல் அரெஸ்ட் என மோசடி: கோவையில் ரூ.5.50 கோடி பறிப்பு: கடைசி நேரத்தில் தப்பியது ரூ.3 கோடி
கோவை: கோவையை சேர்ந்த முதிய தம்பதியை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' என மிரட்டி, 5.50 கோடி ரூபாயை, சைபர் குற்றவாளிகள் பறித்துள்ளனர்.
கோவையை சேர்ந்த 78 வயது முதியவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். மனைவியுடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், கேரளாவில் சமூக விரோத கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அதிர்ச்சி அளித்தது.
இதுதொடர்பாக, விசாரணை நடப்பதாகவும், விசாரணையில் சிக்காமல் இருக்க, தாங்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். விசாரணை முடிந்ததும், பணம் திருப்பி வழங்கப்படும் என, நம்ப வைத்தனர். மர்ம கும்பலின் பேச்சை நம்பிய முதியவர், சில நாட்களில், இரண்டு தவணைகளில் மொத்தம், 5.50 கோடி ரூபாயை வங்கி கணக்கு வாயிலாக அனுப்பியுள்ளார்.


