வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கு தங்கப்பதக்கம்
கோவை: தமிழக காவல்துறை சார்பில் சென்னையில் நடக்கும், மாநில அளவிலான ‘பாதுகாப்பு சோதனை போட்டி– 2026’ ல், கோவை மாநகர பிரிவினரும் பங்கேற்றுள்ளனர்.
இரண்டாம் நாளான நேற்று, வாகன சோதனை போட்டி நடத்தது. வெடிகுண்டு கண்டறிதல், செயலிழப்பு பிரிவு சூர்யா, 82 புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். தங்கப்பதக்கம் வென்ற சூர்யாவுக்கு மாநகர கமிஷனர் கண்ணன் மற்றும் சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


