பிஎம் ஸ்ரீ திட்டம்: விரைந்து முடிவெடுக்க கேரளத்துக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
கேரளத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்கும்படி, அந்த மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள கல்வித் துறை அமைச்சா் என். சம்சுதீன் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
கேரள கல்வித்துறை செயலாளருக்கு மத்திய கல்வித் துறை செயலாளா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் (பிஎம் ஸ்ரீ) திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்கும்படியும், அப்போதுதான் அடுத்தடுத்த திட்டங்களை விரைவுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளாா். அந்த கடிதம் கிடைக்கப் பெற்று சில நாள்களே ஆகின்றன.

