சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாமல் அவதி
சித்தாமூர், செப். 13– சித்தாமூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணியர்
சித்தாமூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
சித்தாமூர் பஜார் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் பி.டி.ஓ., அலுவலகம், வட்டார வேளாண் அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.
மதுராந்தகம், சூணாம்பேடு , செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை , புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்லுபவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள், சித்தாமூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பேருந்து நிறுத்ததை பயன்படுத்துகின்றனர்.




