அகில இந்திய பூப்பந்து போட்டி பள்ளி மாணவிகள் சாதனை
விக்கிரவாண்டி: முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அகில இந்திய அளவிலான பூப்பந்துபோட்டியில் மூன்றாமிடம் பிடித்து சாதனை.
சென்னை, எஸ் .ஆர் .எம். , வள்ளியம்மை இன்ஜினியரிங் கல்லுாரியில் கடந்த 5,6 ம் தேதிகளில் நடந்த அகில இந்திய பூப்பந்து போட்டியில் விழுப்புரம் மாவட்டம் சார்பில் முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 10 பேர் பங்கேற்று மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.இதில்
மாணவி ராஜ ஸ்ரீ, 16 ; சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டார் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் கணபதி ,பயிற்சியாளர் ராஜ்குமார் ஆகியோர் வெண்கலபதக்கம் , சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

