பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் – 2 சென்னையில் 12 அணிகள் மோதல்
சென்னை: ராயப்பேட்டையில் நேற்று தொடங்கிய பிக்கிள் பால் பிரீமியர் லீக் இரண்டாவது தொடரில், 12 அணிகள் மோதுகின்றன.
கேவின் நிறுவனத்தின், டி.என்.பி.பி.எல்., எனும் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் இரண்டாவது தொடர், ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில், நேற்று காலை தொடங்கின.
சென்னை தமிழ் டைட்டன்ஸ், காஞ்சி பிளாக்பக்ஸ், கோவை ஸ்மாஷர்ஸ், மதுரை ஆல் ஸ்டார்ஸ் உட்பட 12 அணிகள் களமிறங்கி உள்ளன. போட்டிகள், வரும் 20ம் தேதி வரை தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை நடக்கின்றன.



