புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கொடைக்கானல் பாக்கியபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 41-ஆவது ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடைக்கானல் பாக்கியபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை பவனியாக எடுத்து வரப்பட்ட மாதாவின் உருவம் பொறித்த கொடி.
முன்னதாக நாயுடுபுரம் பகுதியிலுள்ள பி.சி.கே. அருள்சகோதரிகள் இல்லத்திலிருந்து மாதாவின் உருவம் பொறித்த கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தை அடைந்தது. இதையடுத்து, மதுரை உயா்மறை மாவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ பாக்கியராஜ் தலைமையில், திருச்சியைச் சோ்ந்த அருள்பணியாளா் மரிய மைக்கேல், அருள்பணியாளா் வினோத் மத்தியாஸ் ஆகியோா் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினா்.


