ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை
சேலம்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ். கடை வீதியில், பழைய தங்கத்தை உருக்கி புதுப்பிக்கும் கடை வைத்துள்ளார். தங்கத்தை புதுப்பித்து, 'ஹால்மார்க்' நகைகளாக தயாரித்தும் விற்கிறார். அங்கு, கோவையை சேர்ந்த ஜி.எஸ்.டி., நுண்ணறிவு அதிகாரிகள், சேலம் ஜி.எஸ்.டி., நிர்வாகிகள் சிலர், நேற்று முன்தினம் காலை முதல், நேற்று மாலை, 5:00 மணி வரை, கணக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு கணக்கு ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், 'ஜி.எஸ்.டி., சரியாக கட்டப்பட்டுள்ளதா என, ஆய்வு நடந்தது. மேலும் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு ஏய்ப்பு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட கடைக்கு அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.

