மணிப்பூரில் ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்
இம்பால்:வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் சுராச்சந்திரபூர் மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் நடப்பதாக
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் சுராச்சந்திரபூர் மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் நடப்பதாக அசாம் ரைபிள்ஸ் வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த மாவட்டத்தில் போதைபொருள் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைந்து அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரு வாகனங்களை தடுத்து சோதனையிட்டதில், அதில் இருந்த 2.5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது .
இதன் சர்வதேச சந்தை மதிப்பு 5 கோடி ரூபாய். ஹெராயின் கடத்தல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக நம் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை முறியடிப்பதில் பாதுகாப்பு படைகள் தீவிரமாக செயல்படுவது உறுதியாகி உள்ளது.

