கண்டடத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் வேன் மோதி உயிரிழப்பு
குண்டடத்தில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி சரக்கு வேன் மோதியதில் உயிரிழந்தாா்.
குண்டடம் அருகே உள்ள முத்தனம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (58). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை மாலை குண்டடம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேன் அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
