கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற மினிலாரி பறிமுதல்
களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை போலீஸாா் மேக்கோடு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக கேரளம் நோக்கி கனிமவளம் ஏற்றி வந்த மினிலாரியை நிறுத்த சைகை காட்டினா்.
ஆனால் மினிலாரி நிற்காமல் சென்றது. வாகனத்தில் துரத்திச் சென்ற போலீஸாா், துப்புரமூலை பகுதியில் மினிலாரியை மடக்கினா். லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
