மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது - மு.வீரபாண்டியன் கண்டனம்
சென்னை,மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது - மு.வீரபாண்டியன் கண்டனம். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ
சென்னை, சைதாப்பேட்டை தொகுதி, மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில் நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாடகை செலுத்தி வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 குடும்பங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள், அவர்களின் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டுமென மிரட்டப்படுகிறார்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.
அவர்களின் வசிப்பிடத்தை வேறு சில தனியார் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சிலரும், அதிகாரிகளும், தனிநபர்களும் இணைந்து அவர்களை மிரட்டுகிறார்கள் என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
தனது வீட்டுக்கு எதிரே ஏழை எளிய மக்களின் குடியிருப்புகள் இருப்பதை விரும்பாத ஒரு நபர், அக்குடியிருப்புகளை அகற்ற பொது நல வழக்கை போட்டுள்ளார் என்றும் ஏழை மக்களின் குடியிருப்புகள் உள்ள இடத்தை அபகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் பாதிக்கப்பட்டுள்ளோர் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை காவல்துறை அந்த குடியிருப்பு பகுதியில் குவிக்கப்பட்டது.



