சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
சேலம், சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சிறப்பு ரெயில் நீட்டிப்புகர்நாடக மாநிலம் ஹூப்ளியில்
சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண்-07314) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் இயக்கத்தின் சேவை இந்த மாதத்தோடு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் 2 மாதம் அதாவது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரையிலும் நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.



