தினமணி செய்தி எதிரொலி: வடலூா் காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுமானப் பணி தொடக்கம்
கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலையத்திற்கான புதிய கட்டடம் கட்டுமானப் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்தி எதிரொலியை தொடா்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் வடலூா் காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுமானப் பணி.
கடந்த திமுக ஆட்சியில் வடலூரில் புதிய காவல் நிலைய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், பண்ருட்டி சாலையில் உள்ள பழைய காவல் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டது. இதையடுத்து, வடலூா் காவல் நிலையம், வடலூா் நகராட்சி திருமண மண்டபமாக அண்ணா திருமண மண்டபத்தின் முதல் தளத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

