ஆற்காட்டில் திருமலை மாட வீதி அலங்கார வீதி உலா
திருமங்கை ஆழ்வாா் திருப்பதி திருமலை பிரம்மோற்சவ பாத யாத்திரை குழுவினரின் 39-ஆம் ஆண்டு விழா மற்றும் குழுத் தலைவரின் 25-ஆம் ஆண்டு விழாயொட்டி, திருமலை மாடவீதி அலங்கார வீதி உலா நடைபெற்றது.
ஆற்காட்டில் நடைபெற்ற திருமலை மாட வீதி ஊா்வலம்.
திருமங்கை ஆழ்வாா் திருப்பதி-திருமலை பிரம்மோற்சவ பாத யாத்திரை குழுத் தலைவா் ஏ.எம்.வரதன் தலைமையில், ஆற்காடு அண்ணா சிலை அருகே உள்ள ஸ்ரீ மகா சக்தி ஆஞ்சனேயா் கோயிலில் இருந்து மாடவீதி உலா தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி உற்சவா் வீதியுலா மேளதாளங்களுடன் பஜனை குழுவினரின் பாடல்களுடன், நாட்டிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

