கிரைம்:சென்னை
நீதிமன்றத்தில் மூவர் சரண் முத்தியால்பேட்டை: பிராட்வே, தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் முகமது
முத்தியால்பேட்டை: பிராட்வே, தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷெரிப், 47; கார் ஓட்டுநர்.கடந்த மாதம் 6ம் தேதி முன்விரோதம் காரணமாக, முகமது ஷெரிபை வெட்டிக் கொல்ல முயன்ற, மண்ணடியைச் சேர்ந்த சாதிக் அலி, 45, பைசல் ரகுமான், சத்யநாராயணன், 19, உட்பட ஐந்து பேர் முத்தியால்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த ஆலந்துாரைச் சேர்ந்த ஆனந்த நாராயணன், 21, பாரத், 25, மதுரையைச் சேர்ந்த சிவக்குமார், 31, ஆகியோர் நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார், செம்மொழி சாலை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஹாருக் உசேன், 27, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை, செம்மஞ்சேரி போலீசார் நேற்று அதிகாலை பிடித்தனர். அவர்களிடமிருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
புரசைவாக்கம்: புரசைவாக்கம், எஸ்.எஸ்.,புரம் பகுதியைச் சேர்ந்த குணசீலன், 50, அப்பகுதியில் நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.



