நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாட்டம்.. டெல்லியில் பலத்த பாதுகாப்பு
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும் நிலையில், டெல்லியில் பலத்த பாதுகாப்பு
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கு சென்று கிருஷ்ணரை வழிபட்டு வருகின்றனர்.
ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோயில்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும், பக்தி இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

