இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மேலப்பொன்னகரம் பகுதிக் குழுச் செயலா் சிந்து மோகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் டி. செல்வா, மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா, பொருளாளா் க. கௌதம் பாரதி, மதுரை மாநகராட்சி 58-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் வை. ஜென்னியம்மாள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பகுதிக் குழுச் செயலா் ஏ. பாண்டி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினா்.

