இத்தாலி விமான நிலையத்தில் பயணியின் சூட்கேசில் காய்ந்த முதலைத் தலை
ரோம்,இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்து வைக
இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் வடக்கு நகரமான டுரின் பகுதியில் புகழ்பெற்ற காசெல்லே விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கோடைகாலக் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, இத்தாலிய நிதி போலீசாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலி வந்திறங்கிய இத்தாலிய பயணி ஒருவரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.
அப்போது, ராட்சத முதலையின் காய்ந்த தலை ஒன்று சாதாரண பரிசு காகிதத்தால் சுற்றப்பட்டு, சூட்கேசுக்குள் இருந்த துணிகளுக்கு நடுவே ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும், விமான நிலைய பாதுகாப்பு வளையங்கள் மற்றும் ஸ்கேனர்களில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)