தேயிலை பூங்காவில் ‘போட்டோ சூட்’
ஊட்டி: ஊட்டி தேயிலை பூங்காவில், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா சிகரம் ஆகியவற்றுக்கு செல்கின்றனர். அருகிலுள்ள தேயிலை பூங்காவுக்கும் செல்ல தவறியதில்லை.
இந்நிலையில், கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து, வந்திருந்த சுற்றுலா பயணிகள், ஊட்டி தொட்டபெட்டா சிகரம் அருகில் உள்ள தேயிலை பூங்காவுக்கு வந்தனர். அங்கு, காட்சிப்படுத்தப்பட்டு இருந்த, மாதிரி தேயிலை தொழிற்சாலையில், தேயிலை துாள் தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்தனர். புல்வெளியில் விளையாடி மகிழ்ந்த பயணியர், தேயிலை தோட்டத்திற்குள் சென்று பசுந்தேயிலை பறித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


