சரியான முடிவுகள் எடுக்கத் தெரியவில்லை; பாபர் அசாமை கடுமையாக விமர்சித்த அக்தர்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு சரியான முடிவுகள் எடுக்கத் தெரியவில்லை என முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாபர் அசாம் (கோப்புப்படம்)
பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது.


