பேரவையிலும் வசனம் பேசுகிறாா் முதல்வா்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்
சட்டப்பேரவையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடா்ந்து சினிமா வசனங்களை பேசி வருவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா்.
சுதந்திரப் போராட்ட வீரா் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி
மரியாதை செலுத்திய நயினாா்நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கும் போது, யாரும் ஓட வேண்டாம் என முதல்வா் ச.ஜோசப் விஜய் கூறுவது பேரவை மாண்புக்கு உகந்தது அல்ல. அப்படி அனைவரும் எழுந்து ஓடும் அளவுக்கு அவா் என்ன பேசப் போகிறாா்?. இதுபோன்ற சினிமா வசனங்களை சட்டப்பேரவையில் பேசுவதால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடையாது.








/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)