பள்ளியில் குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு மையம் துவக்க விழா
கம்பம், செப். 18 ராயப்பன்பட்டி எஸ்.யூ. எம்., மேல்நிலைப் பள்ளியில் பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு மையத்தை
ராயப்பன்பட்டி எஸ்.யூ. எம்., மேல்நிலைப் பள்ளியில் பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு மையத்தை சி.இ.ஓ., முருகன் திறந்து வைத்தார்.
கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. அதிகாலையில் கணவன், மனைவியும் கேரளா ஏலத் தோட்ட வேலைக்கு செல்கின்றனர். அந்த குடும்பங்களில் உள்ள சிறு குழந்தைகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் முடியாத சூழல் இருந்தது. ராயப்பன்பட்டி எஸ் . யூ. எம். மேல்நிலைப் பள்ளியில் ‘பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு மையம்’ பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தியது. இதன் திறப்பு விழா பள்ளி தாளாளர் பிரபாகர் தலைமையில் நடந்தது. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தாமஸ், வட்டார வள மைய அலுவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தனர். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை மீனாட்சி வரவேற்றார். சி.இ.ஓ., முருகன் மையத்தை திறந்து வைத்தார்.
இம்மையத்தில் 3 வயது முதல் 4.5 வயது வரையுள்ள குழந்தைகளை சேர்க்கலாம். இங்கு 102 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி வாகனத்தில் குழந்தைகளை இலவசமாக அனுப்பலாம். அல்லது நேரில் கொண்டு வந்து விட்டு செல்லலாம். இந்த மையத்தில் 3 ஆசிரியைகள், 2 பராமரிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை குழந்தைகளை பராமரிப்பார்கள். இதற்கு கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
