மகளிர் நல வாரியத்தில்பதிவு செய்ய முகாம்
தேனி, செப்.5–தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் செயல்படுகிறது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முகாம் நடக்கிறது.
தேனி, பெரியகுளத்தில் செப்., 8, ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறையில் செப்., 9, சின்னமனுார், போடியில் செப்.,10, உத்தமபாளையம், கம்பத்தில் செப்.,11ல் முகாம் நடக்கிறது. புகைப்படம், ஆதார், நகல், விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, ரேஷன்கார்டு நகல், அலைபேசியுடன் முகாமில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
