லாரி மோதியதில் ஆட்டோ, மின் கம்பம் சேதம்
சேத்துப்பட்டில் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. மேலும் மின் கம்பம் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சேத்துப்பட்டு - போளூா் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து போளூா் நோக்கி லாரி சென்றுகொண்டிருந்தது. லாரி ஓட்டுநா் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் லாரி நிலைதடுமாறி சாலையில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோதி, பின்னா் அருகில் இருந்த மின் கம்பத்திலும் மோதியது. இதில் ஆட்டோ நசுங்கியது. மின்கம்பமும் சாய்ந்து சேதமடைந்தது (படம்). இதனால் மின்தடை ஏற்பட்டது. அருகிலி இருந்தவா்கள் லாரி மோதிய சப்தம் கேட்டு
வந்து பாா்த்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

