”சிறையில் பூத்த புதிய பாதை” - வழி தவறிய குழந்தைகளுக்கு வழி காட்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்
குற்றவாளிகளாக பார்க்காமல் குழந்தையாக பார்க்க வேண்டும், மீண்டும் அவர்களுக்கு சிறைக்கதவு திறந்துடக்கூடாது. மூணு வருஷம் படிச்சிட்டு வெளியே போகும் போது நல்ல வேலைக்கு போயிட்டா அவனோட வாழ்க்கை வெற்றிபயணமா மாறிடும் என்கிறார் மாவட்ட ஆட்சியர்-thanjavur collector revathi education help
''குற்றவாளிகளாகப் பார்க்காமல் குழந்தையாகப் பார்க்க வேண்டும், மீண்டும் அவர்களுக்கு சிறைக்கதவு திறந்துடக்கூடாது. மூணு வருஷம் படிச்சிட்டு வெளியே போகும்போது நல்ல வேலைக்குப் போயிட்டா அவனோட வாழ்க்கை வெற்றிப் பயணமா மாறிடும்'' என்கிறார் மாவட்ட ஆட்சியர்.
பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் புதிய பாதை அமைத்து தரும் பெரும் முன்னெடுப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறார்.
தடைப்பட்ட அவர்களின் கல்விக்கு உயிர் கொடுத்து, தேவையான உதவிகளைச் செய்து ஒளி ஏற்றியிருக்கிறார். கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியே சென்ற குழந்தைகளுக்கு மீண்டும் ஒரு சிறைவாசம் ஏற்படாமல் பாதுகாத்து புதிய பாதை திட்டத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு வழிகாட்டும் மாவட்ட ஆட்சியர் ரேவதியின் செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.


