திருச்சி-அபுதாபி, கோலாலம்பூா் விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
திருச்சியிலிருந்து அபுதாபி மற்றும் கோலாலம்பூருக்கு செல்ல வேண்டிய விமானங்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும், உள்நாட்டில் சென்னை, பெங்களூரு, தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விமானங்கள் பற்றாக்குறை காரணமாக, ஏற்கெனவே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் திருச்சி - சிங்கப்பூா், சிங்கப்பூா் - திருச்சி விமானங்கள் செப்டம்பா் 1 முதல் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





