அழகப்பா பள்ளிக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்குமா
காரைக்குடி; காரைக்குடி அழகப்பா பல்கலையின் கீழ் செயல்படும் அழகப்பா மாதிரி பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளதாக பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் சமூக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்திலேயே பல்கலையின் கீழ் செயல்படும் ஒரே பள்ளி காரைக்குடியில் செயல்பட்டு வரும் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியாகும். ஏழை மாணவர்களுக்காக 1951ம் ஆண்டு அழகப்பா மாதிரி பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு ஆயிரத்து 300 மாணவர்கள், 38 ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வை அறிவித்தது.

