போலி நகை திட்டம் மூலம் ரூ. 1.5 கோடி மோசடி: ஒருவா் கைது
தனது தந்தையுடன் இணைந்து போலி நகை திட்டத்தை நடத்தி 1,200 க்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து சுமாா் ரூ. 1.5 கோடி மோசடி செய்த 24 வயது நபர் குஜராத் மாநிலத்தின் சூா்த் விமான நிலையத்தில் கைது
தனது தந்தையுடன் இணைந்து போலி நகை திட்டத்தை நடத்தி 1,200 க்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து சுமாா் ரூ. 1.5 கோடி மோசடி செய்த 24 வயது நபரை தில்லி போலீஸாா் குஜராத் மாநிலத்தின் சூா்த் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவரின் பெயா் அனிகேத் வா்மா. 24 மாத தங்க நகை திட்டம் முடிந்த பிறகு ரூ.28,000 அல்லது அதற்கு சமமான நகைகளை வழங்குவதாக உறுதிமொழியுடன் உறுப்பினா்களிடமிருந்து மாதத்திற்கு ரூ. 1,000 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.

