ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே முதியவா் ஒருவா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை முதியவா் ஒருவா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், கரையான்குறிச்சி கிராமம்,ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த பிச்சை மகன் அழகானந்தம் (65). விவசாய கூலித்தொழிலாளி.இவா் புதன்கிழமை காலை கபிஸ்தலம் வந்து வேலைபாா்த்துவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
கபிஸ்தலம் எல்லையான பட்டுகுடியில் இருந்து கொள்ளிடம் ஆற்றை கடந்து கரையான்குறிச்சி கிராமத்துக்கு சென்ற போது ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.