கோவில் வளாகத்தில் காருக்குள் 2 மணிநேரம்... கல்லூரி மாணவியுடன் இருந்த காதலன் செயலால் பரபரப்பு
திருப்பூர்கோவில் வளாகத்தில் காருக்குள் கல்லூரி மாணவியுடன் 2 மணிநேரம் இருந்த காதலன் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை
கோவில் வளாகத்தில் காருக்குள் கல்லூரி மாணவியுடன் 2 மணிநேரம் இருந்த காதலன் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டி உலகப்புகழ் பெற்றது ஆகும். இந்த நிலையில் நேற்று மதியம், சிவன்மலை மேல் ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.
அந்த காரில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரும், இளம்பெண் ஒருவரும் இருந்தனர். சுமார் 2 மணி நேரமாக அவர்கள் காருக்குள்ளேயே இருந்து கொண்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கோவில் பணியாளர்கள், காரின் அருகில் பார்க்க சென்றனர்.


