தில்லியில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
தில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, வானிலை ஆய்வு மையம் மாலை 5 மணி வரை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையின்போது ஜன்பத் சாலையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற நபா்.
செப். 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தலைநகா் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாடாளுமன்றத் தெரு, பாரத் மண்டபம் உள்ளிட்ட மத்திய மற்றும் வடக்கு தில்லியின் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

