3 மாத குழந்தை சாவு போலீஸ் விசாரணை
தர்மபுரி; தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த குறுக்கலை-யனுாரை சேர்ந்தவர் செந்தில், இவரது மனைவி திரிஷா, 22. தம்பதிக்கு ஏற்கனவே, ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், 2வதாக திரி-ஷாவிற்கு குறைப்பிரசவத்தில், 6 மாதத்தில் தர்ம-புரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம-னையில் பெண் குழந்தை பிறந்தது. எனவே குழந்தையை, இங்க்பேட்டரில் வைத்து, 3 மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், தாயும், குழந்-தையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த, 1ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு திரிஷா குழந்தைக்கு பால் கொடுக்கும்போது, குழந்தைக்கு புரையேறியுள்ளது. இதில், குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் பால் வடிந்தது. தொடர்ந்து, குழந்தை இறந்து விட்டது. ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


