எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
சென்னை,எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட
எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தவெக ஆட்சி அமைத்து 120 நாட்களைக் கடந்தும் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி - வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




