ஆறு மாவட்டங்களுக்கு 2 மண்டல திட்டம் தயார்
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சியை ஒருங்கிணைத்து மேம்படுத்த, கோவை, நீலகிரி உட்பட ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய, இரண்டு மண்டல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நகர் ஊரமைப்பு துறை, உள்ளூர் அளவில் முழுமை திட்டங்கள், விரிவான வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில், மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படும் என, 2020ல் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:


