மருத்துவச்சி குஞ்சம்மாள் சிலைக்கு புஷ்ப அபிஷேகம்
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் ஸ்ரீ திரிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அறங்காவலர் கிருஷ்ணன் குட்டியின் தாய் மருத்துவச்சி குஞ்சம்மாளின் மணிமண்டபத்துடன், கோவில் உள்ளது.
குஞ்சம்மாளின் 32ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி , அவரது சிலைக்கு புஷ்ப அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன.
கோவில், அறங்காவலர் கிருஷ்ணன் குட்டி, அவரது மனைவி ஓமணா, மகள் விஜயலட்சுமி, மகன் மணிகண்டன், மருமகள் உட்பட சுற்றுப்புற பகுதி மக்கள், மணிமண்டபத்திற்கு வந்து வழிபாடு செய்தனர்.

