பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு முன்ஜாமின்
பெங்களூரு: பலாத்கார வழக்கை வாபஸ் பெறும்படி பெண்ணை மிரட்டிய வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.
பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கும், 35 வயது பெண் அளித்த புகாரில், ரவிசங்கர் என்பவர் மீது, டில்லி சாணக்யபுரி போலீசார் பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை வாபஸ் பெறும்படி பெண்ணை மிரட்டியதாக, ஆர்.ஆர்.நகர், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா அவரது ஆதரவாளர்கள் கிரண் நாயுடு, லோகித், மஞ்சுநாத், லட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யண்ணா ரெட்டி, லோஹித், எஸ்.ஐ., சந்திரசேகர் ஆகியோர் மீது, ஆர்.ஆர்.நகர் போலீசார், கடந்த 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

