புனேயில் இளைஞர்கள் திரண்டு போராட்டம்; எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் ஆதரவு
மும்பை, அரசு தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து புனேயில் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்த
அரசு தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து புனேயில் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் மருந்து ஆய்வாளர் பணிக்கான குருப்-பி தேர்வு நடந்தது. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் கசிவு அம்ப லமானது. இந்த விவகாரத்தில் தேர்வில் 7-வது இடம்பிடித்த பெண் தேர் வர் உள்பட 7 பேரை மும்பை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்தநிலையில் அரசு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள். வினாத்தாள் கசிவை கண்டித்து புனேயில் நேற்று திடீரென மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் போராட்டம் நடந்தது. தேர்வு செயல்முறைகளில் வெளிப்ப டைத்தன்மை வேண்டும் என அரசு வேலை தேடும் இளைஞர்களும், தேர்வர்களும் என ஆயிரக்கணக்கானவர்கள் திடீரென திரண்டனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)