சாய் பல்லவி, ஸ்ரீலீலா வரிசையில் இணைந்த புதிய ‘டான்சிங் குயின்’... யார் இந்த நாகதுர்கா?
சென்னை,சாய் பல்லவி, ஸ்ரீலீலா வரிசையில் ‘டான்சிங் குயின்’ ஆக நாகதுர்கா இணைந்திருக்கிறார். தனி இடம்பொதுவாக ‘நடனம்’ என்றாலே கதாநாயகர்களின் பெயர்கள்தான் முதலில் நின
பொதுவாக ‘நடனம்’ என்றாலே கதாநாயகர்களின் பெயர்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், சமீபகாலமாக தங்களது நடனத் திறமையால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து, திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வரும் நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நடிப்புக்கு இணையாக நடனமும் கதாநாயகிகளின் மிகப்பெரிய பலமாக மாறி வருகிறது. அந்த வகையில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் தங்களது நடனத் திறமையால் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பெற்றுள்ளனர்.
சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கடினமான நடன அசைவுகளைக்கூட மிக எளிதாகச் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்கள் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உருவாகும் அளவுக்கு, அவர்களின் நடனம் திரைப்படங்களின் முக்கியமான அம்சமாக மாறியுள்ளது.


