போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கு; குற்றவாளி தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து சீராய்வு
- சிறப்பு நிருபர் -சென்னை போரூர் அருகே ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்த
சென்னை போரூர் அருகே ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்த வழக்கில் இருந்து, குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னையை அடுத்த போரூரில் ஆறு வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் எரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
கடந்த 2017ல் நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் கைதான தஷ்வந்துக்கு ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த தஷ்வந்த், தாயை அடித்து கொன்றுவிட்டு தலைமறைவானார்.



