தவெக வின் சவாலை திமுக ஏற்குமா?
எஸ்.ராமையா, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பொங்கல் இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தில், வேட்டியின் அளவு எட்டு முழத்தில் இருந்து, நான்கு முழமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு முழ வேட்டி தயாரிப்பதற்கு, தறி, அச்சு மாற்ற வேண்டி உள்ளது. எட்டு முழ வேட்டியை விட நான்கு முழ வேட்டியின் தரம் குறைவு' என்று சட்டசபையில் குறிப்பிட்டுள்ளார், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆஸ்டின்.
பிள்ளையே பிறக்கவில்லையாம்... அதற்குள், 'என் பிள்ளையை போல் உண்டா... எட்டு ஊரை கட்டி அடிப்பான்' என்றாளாம் ஒருத்தி!
அதுபோல், வேட்டி தயாரித்து வெளிவருவதற்கு முன், அந்த வேட்டியின் தரம் குறைவாக தான் இருக்கும் என்று, ஆஸ்டின் எப்படி கண்டுபிடித்தார்?


