சைபர் வழக்கு 10 பேர் கைது ரூ.42.72 லட்சம் மீட்பு
சென்னை, செப். 10-– மத்திய குற்றப்பிரிவில் பதிவான சைபர் மோசடி வழக்குகளில், தனிப்படை போலீசார் ஐந்து
மத்திய குற்றப்பிரிவில் பதிவான சைபர் மோசடி வழக்குகளில், தனிப்படை போலீசார் ஐந்து மாநிலங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி, 10 பேரை கைது செய்தனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் பதிவு செய்யப்பட்ட ஆறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு, தொடர் விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், வழக்குகளில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்யும் பணியில், தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்குகளில் மொத்தம் 24 கோடியே 54 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிபோன நிலையில், 42 லட்சத்து 72 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளது.





