அரசு மருத்துவமனைகளில் சிறுதானிய உணவகங்கள்
விருதுநகர்: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், அவர்களை உடன் இருந்து பார்த்து கொள்பவர்களுக்கு தேவையான உணவுகள், பால் பொருட்கள் மருத்துவமனை வளாகத்தில் கேண்டீன்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கேண்டீன்கள் பெரும்பாலும் அரசியல் பின்புலம் உள்ளவர்களால் டெண்டர் எடுத்து நடத்தப்படுவதால் சேவை மனப்பான்மையுடன் இல்லாமல் வெளியே உள்ள உணவகங்களை இருப்பதை போலவே உணவு, பால் பொருட்களின் விலையும் உள்ளது.
நோயாளிகள், அவர்களை உடன் இருந்து பார்த்து கொள்பவர்களுக்கு சத்தான பாரம்பரியமிக்க உணவுகளை குறைந்த விலையில் கொடுப்பதற்காக சிறுதானிய உணவகங்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றை அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
